தற்போதுள்ள கலப்பு தேர்தல் முறை மிகவும் மோசமானது என்பதற்கு வவுனியா நகர சபையின் ஆட்சி அதிகாரம், ஈபிஆர்எல்எவ் வசமாகியதே சிறந்த உதாரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். “21 ஆசனங்களைக் கொண்ட வவுனியா நகர சபையில் 8 ஆசனங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஆட்சியமைக்க முடியாது போயுள்ளது. வெறுமனே, 3 ஆசனங்களை கைப்பற்றிய ஈபிஆர்எல்எவ், சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ,பொதுஜன முன்னணி மற்றும் ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன், “தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை தோற்கடிக்க வேண்டும் என்ற திடசற்கற்பத்துடன் ஏனைய கட்சிகள் திட்டமிட்டு ஒன்று சேர்ந்துள்ளமை தெளிவாகத் தெரிகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட வட்டாரங்களிலே தோல்வியைத் தழுவிய தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் விகிதாசார முறைமையினால் ஆசனங்களைப் பெற்று நகர சபைக்குத் தெரிவாகினர். ஏனைய கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடித்துள்ளனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment