Header Ads

test

சிரியா மீதான தாக்குதல் தொடரும் - அமொிக்கா

சிரியா தொடர்ந்தும் இரசாயன தாக்குதல் நடத்தினால் மீண்டும் பதிலடி தாக்குதல் நடத்தப்படும். இதற்காக அமெரிக்கா ஆயுதங்களை தயார் நிலையில் வைத்துள்ளது என்று அமொிக்க அதிபர் டிரம்ப் என்னிடம் கூறினார் என ஐ.நாவுக்கான அமொிக்கத் தூதுவர் நிக்கி காலே கூறியுள்ளார்.

சிரியா நடத்திய இரசாயன தாக்குதலையும், அத்துமீறலையும் தடுக்கும் வகையில் தான் அவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு தெளிவான செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் இரசாயன தாக்குதல் நடத்தலாம்.

எங்கள் அதிபர் ஒரு எல்லை வகுத்துள்ளார். அந்த எல்லையை தாண்டும் போது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என அவர் மேலும் தனது ஐ.நா விவாத உரையில் தெரிவித்துள்ளார்.

No comments