மயிலிட்டியில் அழிக்கப்பட்ட நிலையில் சிறிலங்கா இராணுவத்தின் ஆயுதக் களஞ்சியம்
வலி.வடக்கில் 28 ஆண்டுகளாக சிறிலங்கா இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்த மயிலிட்டி, கட்டுவன் பகுதிகளில் உள்ள 680 ஏக்கர் காணிகள் கடந்தவாரம் விடுவிக்கப்பட்டன.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட மயிலிட்டிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் பாரிய ஆயுதக் களஞ்சியம் ஒன்றை பேணிவந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
ஆயுதக் களஞ்சியமாகப் பயன்படுத்தப்பட்ட இடங்களை சிறிலங்கா படையினர் அழித்துள்ள போதிலும், அதற்கான தடயங்கள் பல விட்டுச் செல்லப்பட்டுள்ளன.
இங்கிருந்த ஆயுதக் களஞ்சியம் தற்போதும் சிறிலங்கா படையினர் வசமுள்ள வலி.வடக்கின் ஏனைய பகுதி ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது
Post a Comment