Header Ads

test

தியாகதீபம் திலீ­ப­னின் தூபி மீளக்­ கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வுள்­ளது!


நல்­லூர் பின்­வீ­தி­யில் அமைந்­துள்ள தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வுத் தூபி மீள­வும் கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வுள்­ளது. 2002ஆம் ஆண்டு திறந்து வைக்­கப்­பட்­ட­போது இருந்த வடி­வத்­தில் அந்தத் தூபி கட்­டி­யெ­ழுப்­பப்­பட்டு, திலீ­ப­னின் நினைவு நாளான செப்­ரெம்­பர் 26ஆம் திறந்து வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் புதிய மேயர் இ.ஆனோல்ட் தலை­மை­யில் மாந­கர சபை உறுப்­பி­னர்­கள், மாந­கர சபை ஆணை­யா­ளர், பொறி­யி­ய­லா­ளர் ஆகி­யோர் இடித்­த­ழிக்­கப்­பட்ட நினை­வுத் தூபியை நேற்று நேரில் சென்று பார்­வை­யிட்­ட­னர்.

இலங்­கைக்கு அமை­திப்­ப­டை­யாக வந்­தி­றங்­கிய இந்­தியா, ஆக்­கி­ர­மிப்­புப் படை­யாக மாறி­யது. இந்­திய தேசத்­துக்கு எதி­ராக 5 அம்­சக் கோரிக்­கை­களை முன்­வைத்து, தியாக தீபம் திலீ­பன் 1987ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 14ஆம் திகதி உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­தார். 12 நாள்­கள் குடி­தண்­ணீர் உள்­ளிட்ட எந்­த­வொரு ஆகா­ர­மும் இன்றி அகிம்சை வழி­யில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை நடத்­தி­யி­ருந்­தார். செப்­ரெம்­பர் 26ஆம் திகதி, வீரச்­சா­வ­டைந்­தி­ருந்­தார்.

தியா­க­தீ­பம் திலீ­ப­னின் நினை­வுத் தூபி, நல்­லூர் கோயில் பின் வீதி­யில் அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. யாழ்ப்­பா­ணக் குடா­நாடு இரா­ணு­வக் கட்­டுப்­பாட்­டுக்­குள் வந்த பின்­னர் நினை­வுத் தூபி இரா­ணு­வத்­தி­ன­ரால் இடித்­த­ழிக்­கப்­பட்­டது.

2002ஆம் ஆண்டு சமா­தான ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்ட பின்­னர் அதே இடத்­தில் 23 அடி உய­ர­மான தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வுத் தூபி மீள­வும் அமைக்­கப்­பட்­டது. 2006ஆம் ஆண்டு, ஏ-9 வீதி மூடப்­பட்ட பின்­னர், ஊர­டங்கு நேரத்­தில் நினை­வுத் தூபி மீள­வும் இடித்­த­ழிக்­கப்­பட்­டது.

நினை­வுத் தூபி மீளக் கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டும் என்று வடக்கு மாகாண சபை கடந்த ஆண்டு தீர்­மா­ன­மும் நிறை­வேற்­றி­யி­ருந்­தது. இந்த நிலை­யில் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் ஆட்­சி­யைக் கைப்­பற்­றிய தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முத­லா­வது நட­வ­டிக்­கை­யாக, நினை­வுத் தூபியை மீளக்­கட்­டி­யெ­ழுப்­பும் நட­வ­டிக்­கை­யில் இறங்­கி­யுள்­ளது.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மேயர் இ.ஆனோல்ட், துணை­மே­யர் து.ஈசன், மாந­கர சபை உறுப்­பி­னர்­க­ளான ப.தர்­சா­னந்த், ந.லோக­த­யா­ளன், யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை ஆணை­யா­ளர் த.ஜெய­சீ­லன், மாந­கர சபை பொறி­யி­ய­லா­ளர்­கள், ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்சி உறுப்­பி­னர்­கள் ஆகி­யோர் நினை­வுத் தூபியை நேற்­றுப் பார்­வை­யிட்­ட­னர்

No comments