தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகத் தயாரிக்கப்படவிருந்த புதிய அரசமைப்பை, வௌ்ளைவான் கடத்திச் சென்று விட்டது என்பதைப் பயமின்றி பொறுப்புடன் தெரிவிக்கின்றேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், தெரிவித்தார். “புதிய அரசமைப்பு ஊடாக தேசிய பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் எனக் வாக்குறுதியளித்து தான் எமது நல்லாட்சி ஆட்சியமைத்தது. அந்த அரசமைப்பு வரும்வரையிலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அந்த அரசமைப்பு என்பது மரத்திலிருக்கும் குருவி, மொழிச்சட்டம் என்பது கையிலிருக்கும் குருவி, கையிலிருக்கும் குருவியை நன்றாக வளர்த்து ஆளாக்க நினைக்கின்றேன். எனவே, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் வகையில், அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை ஜே.வி.பி, தனிநபர் பிரேரணையாக கொண்டுவரவுள்ளது. தமிழ் மற்றும் சிங்கள மொழியை அரச கரும மொழிகளாக்கும் வகையில், அரசமைப்பின் 21ஆவது திருத்தத்தை, எதிர்காலத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளேன். அரசமைப்பின் 21ஆவது திருத்தத்தை நானே கொண்டு வரப்போகிறேன். என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment