கண்டி வன்முறை தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு
சந்தேக நபர்கள் கடந்த 2 ஆம் திகதி தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பான சீ சி ரி வி காணொளி பதிவுகள் நீதிமன்றில் அன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டதோடு, குறித்த காணொளியில் மஹாசொன் அமைப்பின் பிரதானி அமித் வீரசிங்கவும் காணப்படுகின்றார் என அறியப்பட்டதனை தொடர்ந்து, அன்றைய தினம் நீதிமன்றிற்கு சமூகமளிக்காத அமித் வீரசிங்கவை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது
Post a Comment