பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியினுடைய பொறுப்பை ஆர். சம்பந்தன் உரிய முறையில் நிறைவேற்றாமையினால், அப்பதவியை கூட்டு எதிரணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவர் பதவியில் இருந்து கொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக செயற்பட்டார். அத்துடன், ஆர். சம்பந்தன் எதிர்க் கட்சியாக இருந்து குரல் கொடுக்கும் ஒருவர் அல்லவெனவும் பேராசிரியர் மேலும் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் கூட்டு எதிரணி பலமடைவதாகவும் நேற்று(09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்
Post a Comment