Header Ads

test

ஈழ ஏதிலிகளை ஏற்றி கனடா சென்ற கப்பலை அழிப்பது குறித்து இன்னும் தீர்மானமில்லை


எட்டு வருடங்களுக்கு முன்னர் ஈழ ஏதிலிகளை ஏற்றி கனடாவிற்கு சென்ற எம்.வீ.சன்சீ என்ற கப்பலை அழிப்பது குறித்து கனடா அரசாங்கம் இன்னும் தீர்மானம் ஒன்றுக்கு வரமுடியாதிருப்பதாக, கனடாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 492 ஈழ ஏதிலிகளை ஏற்றிய குறித்த கப்பல், கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவைச் சென்றடைந்தது. இந்த கப்பலில் பயணித்த ஈழ ஏதிலிகளுக்கான அரசியல் அந்தஸ்த்து வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, பெரும்பாலும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், தற்போது பிரிட்டிஸ் கொலம்பியாவில் நங்கூரமிட்டுள்ள குறித்த கப்பலில் மிருகங்கள் வசிப்பதாகவும், அதனை என்ன செய்வது என்று அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் கனடாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments