Header Ads

test

நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் தோல்வியடையச் செய்ய எங்களது வாக்குகள் பயன்படுத்தப்படும் - சி.மு.கா

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடையச் செய்வதற்கு தமது வாக்குகளை வழங்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

சற்று முன்னர் நிறைவடைந்த ஸ்ரீ ல.மு.கா. இன் உயர் பீட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள நிலவரங்களையும், முஸ்லிம்களின் எதிர்காலம் தொடர்பிலும் ஆராய்ந்த உயர் பீடம் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடையச் செய்வது என தீர்மானித்தது.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகிய நாம் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கத்துக்கு எதிரான ஒன்றாகவே பார்க்கின்றோம். இன்று கூடிய உயர் பீடத்தில் எழுந்த சில கேள்விகள் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் ஊடகங்களிடம் மேலும் குறிப்பிட்டார்.

No comments