மனித உரிமையாளர் ஈபிடிபி,சுதந்திரக்கட்சி சகிதம் கதிரையேறினார்!
வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் பதவியை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சிறீPலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் தியாகராசா நிரோஸ் கைப்பற்றியுள்ளார்.
காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் போராட்டங்களில் வலிந்து முன்வரிசையில் நிற்கும் தியாகராசா நிரோஸ் அவவற்றினை அரங்கேற்றிய ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சிறீPலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் பதவியை பிடித்துள்ளமை கேள்வியை தோற்றுவித்துள்ளது.
38 உறுப்பினர்களைக் கொண்ட வலி. கிழக்கு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தேர்வு இன்று (04) புதன்கிழமை பிற்பகல் உள்ளுராட்சி ஆணையாளர் ம.பற்றிக் நிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.
தவிசாளர் தேர்வுக்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தியாகராசா நிரோஸையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சண்முகராஜா சிறீமரனையும் பிரேரித்தன.
தவிசாளர் தேர்வு பகிரங்க வாக்கெடுப்பாக நடத்தப்பட வேண்டும் என 34 உறுப்பினர்கள் கோரினர். இரகசிய வாக்கெடுப்பாக நடத்தப்படவேண்டும் என எவரும் கோரவில்லை.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். இந்நிலையில், பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும் ஈபிடிபியின் 6 உறுப்பினர்களும் சிறீPலங்கா சுதந்திரக் கட்சியின் 03 உறுப்பினர்களுமாக 24 உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான தியாகராசா நிரோஸிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 6 உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரேரித்திருந்த சண்முகராஜா சிறீPகுமரனுக்கு வாக்களித்தனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 உறுப்பினர்களும் சுயேட்சைக் குழுவின் 4 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான சி.நவபாலன் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.
தொடர்ந்து நடைபெற்ற உப தவிசாளர் தெரிவின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான ம.கபிலன் உப தவிசாளராகத் தெரிவானார்.
Post a Comment