இலங்கை

கூட்டமைப்பின் வசமானது திருகோணமலை நகரசபை! - தலைவராக நாகராசா இராசநாயகம் தெரிவு


திருகோணமலை நகரசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில்,திருகோணமலை நகர சபையின் முதல் அமர்வு இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி மன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் நாகராசா இராசநாயகம் தலைவராகவும், உபதலைவராக சேனாதிராஜா சிறிஸ்கந்தராஜாவும் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் பதவிக்காக பொதுஜன பெரமுனவின் சார்பில் பி.சுசந்த முன்மொழியப்பட்ட போதும் பகிரங்க வாக்கெடுப்பில் அவர் 4 வாக்குகளை மட்டும் பெற்றுக் கொண்டார். இதில் அகில இலங்கை தமிழ் காங்ரஸின் 02 பேரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவரும் நடுநிலை வகித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட நாகராசா இராசநாயகத்திற்கு 17 வாக்குகள் கிடைத்து அவர் தலைவராக மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment