சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கடைசி கோட்டையாக இருந்த கவுட்டா நகரத்தை அரசுப் படைகள் முழுமையாக கைப்பற்றி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு பதுங்கி இருந்த அரசு எதிர்ப்பாளர்கள் அனைவரும், ஒழிக்கப்பட்டதாகவும், விரட்டியடிக்கப்பட்டதாகவும் சிரியா அரசு இன்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சிரியாவின் அரசு தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடையே பேசிய சிரியா ராணுவப் பேச்சாளர், டமாஸ்கஸ் நகரின் புறநகரான கிழக்கு கவுட்டாவுக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டுவிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 கருத்துகள்:
Post a Comment