சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் நேற்று நடத்திய தாக்குதலில் 70-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்து வரும் முகமை தெரிவித்துள்ளது.
வாயில் இருந்து நுரை தள்ளியவாறு குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கொத்துக்கொத்தாக செத்துக்கிடக்கும் புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் அந்த முகமை வெளியிட்டுள்ளது.
இந்த பலி எண்ணிக்கை நூறாக உயரக்கூடும் என அஞ்சப்படும் நிலையில், மீண்டும் ரசாயன ஆயுதங்களை சிரியா விமானப்படைகள் பயன்படுத்தி இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த குற்றச்சாட்டை சிரியா அரசு மறுத்துள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 கருத்துகள்:
Post a comment