இலங்கை

அத்தனகல்லையில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி, 4 பேர் காயம்


அத்தனகல்லைப் பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகியும், நான்கு பேர் காயமடைந்துமுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தனகல்லைப் பிரதேசத்தில் நேற்றிரவு 10.50 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பகுதியில் இடம்பெற்ற சங்கீத இசை நிகழ்ச்சியொன்றின் போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹெயந்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்களிடையே பெண் ஒருவரும் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment