Video Of Day

Breaking News

ஆசிபாவுக்கு நீதிகோரி கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் (செய்தி இணைப்பு 2)

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டாகப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.

அதற்கு நீதி வழங்கக் கோரி கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் இன்று கண்டனப் பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது.

காலி முகத்திடலில் இருந்து அமைதியாக பேரணியாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுமி ஆசிபாவின் கொலை, பாலியல் வன்முறையை வன்மையாக கண்டிப்பதாகவும் இக் குற்றவாளிகளுக்கு துாக்குத் தண்டனை வழங்கும்படியும் கேட்டுக் கொண்டனர்.

இந்தியாவில் இதுபோன்ற வன்முறைகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படியு இந்தியப் பிரதமர் மோடியைக் கேட்டுக் கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தினை ஜக்கிய சமாதான முன்னணியின் தலைவா் மொஹம்மட் மிப்லால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

No comments