மத்திய கிழக்கு நாடான ஏமனின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள டைஸ் நகரில் சவுதி கூட்டுப்படைகள் வான் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வாகனம் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பொதுமக்களே கொல்லப்பட்டவர்களாவார். கொல்லப்பட்டவர்களில் பெண்கள் குழந்தைளும் உள்ளடங்குகின்றனர்.
ஏமன், சிரியா, ஈராக் மற்றும் லெபனானில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஈரான் மற்றும் சவுதி அரேபியா நாடுகள் முயற்சித்து வருகின்றன. அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் இதுவரை 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 கருத்துகள்:
Post a Comment