Video Of Day

Breaking News

கொல்கத்தாவில் வீசிய புயல்! 10 பலி!

கொல்கத்தாவில் வீசி வரும் மோசமான புயல் காரணமாக இதுவரை அங்கு 10 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயம் அடைந்து இருக்கிறார்கள். மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் நேற்று செவ்வாய்கிழமை இரவிலிருந்து புயல் வீசியது. ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக இந்த புயல் வீசியது.

முதலில் 80 கிமீ வேகத்தில் தொடங்கிய புயல் போக போக அதிக வேகமெடுத்தது. இதனால் கடைசி நேரத்தில் 105 கிமீ வேகத்தில் புயல் வீசியது. இது மரங்கள், சிறிய வீடுகளை அடியோடு பெயர்த்து எடுத்தது. இதனால் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இப்புயலால் போக்குவரத்தும் நாள் முழுக்க நிறுத்தப்பட்டது. பின் 2 மணி நேரம் விமானம் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

இந்த புயல் காரணமாக மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் அதிகமான நபர்கள் காயமடைந்து இருக்கிறார்கள். தற்போது அங்கு காலநிலை இயல்புநிலைக்கு திரும்பி உள்ளது. ஆனாலும் பல இடங்களில் மின்வெட்டு நிலவிவருகிறது.




No comments