Header Ads

test

தொடர் குடியிருப்பொன்றில் தீ பரவல்!


லிந்துளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட தலவாக்கலை கூம்வுடுட் தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது.
 
நேற்று இரவு 11.45 மணியளவில் இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
 
இந்த தீ பரவலில் சுமார் 20 வீடுகள் வரை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
பிரதேச மக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த காவல்துறையினர், அனர்த்தத்தினால் குடியிருப்பில் வசித்த மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையென தெரிவித்தனர்

No comments