பிரித்தானியாவில் புகலிடம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில், குறைந்திருப்பதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. 2007 ஜனவரி முதல் ஒவ்வொரு ஆண்டும் பிரித்தானியாவில் புகலிடம் கோரும் இலங்கையர்களின் விபரங்களை வெளிப்படுத்துமாறு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் Lord Naseby கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய பிரித்தானிய அமைச்சர் பரோனஸ் வில்லியம்ஸ் “2007ம் ஆண்டு 988 புகலிட விண்ணப்பங்கள் கிடைத்தன. அதில், 124 பேருக்கு புகலிடம் வழங்கப்பட்டது. 2008ம் ஆண்டு 1473 விண்ணப்பங்கள் கிடைத்தன. அதற்குப் பின்னர், 2009இல் 1115, 2010 இல் 1357, 2011இல் 1756 புகலிட விண்ணப்பங்கள் கிடைத்தன. இந்த எண்ணிக்கை 2015ம் ஆண்டு 961 ஆக குறைந்தது. 2016ம் ஆண்டு 845 விண்ணப்பங்களும், 2017ம் ஆண்டு 687 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment