இலங்கை

ஆலயக்குருவிற்கும் விசாரணை!


யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலி ஆலயத்தை தொடர்ந்து ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவின் போது அம்மன் தமிழீழ வரை படத்தை ஒத்த அலங்காரத்துடன் வெளிவீதி உலா வந்தமை தொடர்பில் , பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாம்.

குறித்த ஆலயத்தின் பிரதம குருக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்திடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

குறித்த ஆலய மகோற்சவ திருவிழாவின் போது கடந்த 29ஆம் திகதி அம்மன் தமிழீழ வரைபடத்தை ஒத்த அலங்காரத்துடன் வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.

இந்நிகழ்வு சமூக ஊடகங்களில் பிரபல்யமாகியிருந்த நிலையில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment