Header Ads

test

மாவையை விரட்டியது தவறு:கே.சிவாஜி!

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா வெளியேற்றப்பட்டமை கவலைக்குரியதென வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த அவர் தற்போது சிகிச்சை முடிந்து திரும்பியுள்ள நிலையில் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்திருந்தார்.
அரசியல்வாதிகள் போராட்டத்தில் பங்கெடுக்கவேண்டாமென்றால் முதலில் சொல்லவேண்டும்.மாவையினை விரட்டிவிட்டு கஜேந்திரகுமார் போன்றவர்களை பங்கெடுக்க அனுமதிப்பது நியாயமல்லவெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை(16) கூடவுள்ளது.

முல்லைத்தீவில் இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தில் கூட்டமைப்பிற்கு எதிராக மக்களிடையே எழுந்துவரும் எதிர்ப்பு தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments