Video Of Day

Breaking News

அதிஸ்டம் கைகொடுத்தது:வவுனியா வடக்கு கூட்டடைப்பிடம்!


வவுனியா வடக்கு பிரதேசசபைக்கான தலைவர் திருவுளச்சீட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இதனையடுத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு வவுனியா வடக்கு பிரதேசசபையை கைப்பற்றியுள்ளது. அக்கட்சியின் சார்பில் பிரேரிக்கப்பட்ட ச. தணிகாசலம் தலைவராக திருவுளச்சீட்டில் தெரிவாகியுள்ளார்.


கூட்டமைப்பு கட்சி ஐதேக மற்றும் ஜேவிபி ஆதரவோடும், அதிஸ்டமும் கைகொடுக்க திருவுளச்சீட்டில் வெற்றி பெற்று சபையை கைப்பற்றியுள்ளது.
முன்னதாக வவுனியா வடக்கு பிரதேசசபை தலைவர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ச.தணிகாசலத்தின் பெயரும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஜெயரூபனின் பெயரும் முன்மொழியப்பட்டன.


கூட்டமைப்பிற்கு ஐதேக மற்றும் ஜேவிபி கைகொடுக்க கூட்டணிக்கு மஹிந்தவின் பொதுசன பெரமுன கைகொடுத்திருந்தது.
இருதரப்பும் சம வாக்குகளை பெற்றதனையடுத்து திருவுளச்சீட்டின் மூலம் கூட்டமைப்பின் தரப்பை சேர்ந்தவர் தவிசாளராக தெரிவானார்.

No comments